குடிபோதையில் தகராறு.. தட்டிக் கேட்டவருக்கு அடி உதை.. போலீஸ் கண் முன்னே நடந்த பயங்கரம்.. - நிலக்கோட்டை டாஸ்மாக் தகராறு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொடைரோடு மெயின் ரோட்டில் தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கொடைரோடு அருகேவுள்ள விளாம்பட்டியைச் சேர்ந்த சிவா (27), மாயி (23), முகேஷ் (19) ஆகிய மூவரும் சேர்ந்து நேற்றிரவு (ஜூலை 21) மது அருந்திக் கொண்டிருந்தனர்.
மது போதை தலைக்கு ஏறிய நிலையில் தங்களது செல்போனை காணவில்லை என மதுக்கடையில் இருந்த அனைவரையும் தகாத வார்த்தையில் திட்டி உள்ளனர். அப்போது மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்த கொடைரோட்டைச் சேர்ந்த ராஜூ, இதனை தட்டி கேட்டுள்ளார்.
இதனால், கோபாமடைந்த மூவரும் சேர்ந்து ராஜூவை கடுமையாக தாக்கினர். இதைத் தொடர்ந்து மதுக்கடை பணியாளர்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அவர்களே கடையை விட்டு வெளியே போகக் கூறியும் அதை மறுத்து மீண்டும் காவல் துறையினர் முன்னிலையில் ராஜூவை கடுமையாக தாக்கினர்.
இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மூவரையும் கைது செய்த அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைந்தனர்.
இதையும் படிங்க:மூன்று நாள்களாக மது இல்லை; விரக்தியில் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு!