தமிழ்நாடு

tamil nadu

புல்லட் பைக்கை குறிவைத்து திருட்டு

ETV Bharat / videos

தஞ்சையில் புல்லட் பைக்கை குறிவைத்து திருட்டு: பலே கில்லாடி போலீஸில் சிக்கியது எப்படி? - bullet bike recover

By

Published : May 10, 2023, 12:21 PM IST

தஞ்சாவூர்:தஞ்சை மாநகரம் மற்றும் வல்லம், ஒரத்தநாடு காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கடைகள், வீடுகள் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த புல்லட் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டுப் போனதாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்துள்ளன. மேலும், விலை உயர்ந்த இந்த புல்லட்டை திருடும் கும்பலை கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார்.

அதன்படி, தஞ்சாவூர் மாநகர காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலும், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் மேற்பார்வையிலும் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்தும் மற்றும் குறைந்தவிலையில் புல்லட் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்வது குறித்தும் விசாரித்து வந்தனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்ட புல்லட் மோட்டார் சைக்கிளை ஒரு இளைஞரிடம் குறைந்த விலைக்கு விற்க முயலும்போது, போலீசில் ஒருவர் பிடிபட்டார். பின்னர் அவரை விசாரித்தபோது, தஞ்சாவூர் பூக்கார தெருவைச் சேர்ந்த அரவிந்த் (30) என்பது தெரியவந்தது. 

மேலும் தொடர் விசாரணையின் போது, “தஞ்சாவூர் பகுதியில் புல்லட் மோட்டார் சைக்கிள்களை மட்டும் குறிவைத்து 4 பேர் சேர்ந்து திருடுவதாகவும், அதில் உள்ள வாகனப் பதிவு எண்களை மாற்றி, குறைந்த விலைக்கு தஞ்சாவூர் பகுதியிலேயே விற்பனை செய்வதாகவும்” தெரிவித்துள்ளார். 

அதன்படி குறைந்த விலைக்கு விற்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான 20 புல்லட் மோட்டார் சைக்கிள்களை 8ம் தேதி பறிமுதல் செய்து, இந்த புல்லட் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்புடைய அர்ஜூன், அரவிந்த், அலெக்ஸ் ஆகிய மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details