இந்தியாவின் மிக நீளமான டெல்லி-மும்பை விரைவுச்சாலை ஒருபார்வை - delhi mumbai expressway route map in maharashtra
இந்தியாவின் மிக நீளமான டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப். 12) திறந்து வைக்கிறார். இந்த சாலை டெல்லி-மும்பை இடையே 1,386 கிமீ நீளம் கொண்டது. டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்கள் வழியாக கடந்து செல்கிறது. டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு 3.5 மணி நேரத்தில் செல்லலாம்.
டெல்லியில் இருந்து மும்பைக்கு 12 மணி நேரத்தில் செல்லலாம். முதல் பகுதியான டெல்லி-தௌசா-லால்சோட் இடையே 246 கிமீ சாலை நாளை திறக்கப்படுகிறது. இந்த சாலையின் மூலம் பயண நேரம் 50 விழுக்காடு குறையும். நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. 13 துறைமுகங்கள், 8 விமானநிலையங்களில் ஏற்றுமதி-இறக்குமதி பயன்பெறும் வகையில் இருக்கும். சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகிறது.