தமிழ்நாடு

tamil nadu

கொடைக்கானல் வனப்பகுதியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

ETV Bharat / videos

கொடைக்கானல் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் விலங்குகள்.. உயிரிழக்கும் அபாயம்! - பன்றி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 9:02 PM IST

திண்டுக்கல்:கொடைக்கானலில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருந்து வருகிறது. எனவே, இங்கு பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. மேலும், வனவிலங்குகளான காட்டெருமை, மான், பன்றி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் தற்போது அடிக்கடி நகர்ப் பகுதிக்குள் உலா வருகின்றன. 

இதனைத் தொடர்ந்து, கொடைக்கானலில் அடர்ந்த வனப்பகுதியாக உள்ள பாம்பே சோலா வனப்பகுதி, பாம்பார்புரம் வனப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சில சமூக விரோத கும்பல்கள் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளைக் கொட்டி விட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக, அப்பகுதியின் வழியே உலா வரும் வனவிலங்குகளான காட்டெருமை மற்றும் பன்றி உள்ளிட்ட விலங்குகள், இதனைத் தின்று உயிர் இழக்கும் சூழலும் ஏற்பட்டு வருகிறது. 

இதுகுறித்து கொடைக்கானல் வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், தொடர்ந்து வனவிலங்குகள் உயிரிழந்து வருவதால், இயற்கை ஆர்வலர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, வனப்பகுதியில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கையும் எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details