குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2ஆவது சீசனுக்கான மலர் நாற்றுகள் நடவு! - Nilgiris District news
நீலகிரிமாவட்டம் குன்னூர் தோட்ட கலைத்துறை கட்டுப்பாட்டில் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகியவை இயங்கி வருகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் சீசனுக்கான மலர் நாற்றுகள் நடும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி தொடங்கி வைத்தார்.
இதில், 75க்கும் மேற்பட்ட மலர் செடி ரகங்கள் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்டவை. டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, ஸ்வீட், வில்லியம் உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.
“இந்த மலர் நாற்றுகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் இரண்டாம் சீசன் கால கட்டத்தில் பூத்து குளுங்கி இருக்கும். இரண்டாம் கட்ட சீசனில் நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு அது விருந்தாக அமையும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.