தமிழ்நாடு

tamil nadu

வாகனத் தணிக்கையில் இருந்து தப்பிக்க, போலீஸ் வாகனம் மீதே மோதி மாட்டிக்கொண்ட பரிதாபம்

ETV Bharat / videos

மது போதையில் ரோந்து வாகனத்தை முட்டித் தூக்கிய இளைஞர்... போதையை மறைக்க போலீசாருடன் வாக்குவாதம்! - drunk and drive

By

Published : Jul 30, 2023, 4:03 PM IST

சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் 12 மணியளவில்  ராயபேட்டையை சேர்ந்த ரியாஸ் அகமது (வயது 28) என்ற இளைஞர் குடிபோதையில் மாருதி சுசுகி காரை ஓட்டி வந்துள்ளார். 

அப்போது வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்த காவலர்கள் சந்தேகமடைந்து அந்த காரை தடுக்க முற்பட்டபோது காவலர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கிய போது  நிலை தடுமாறிய ரியாஸ் அகமது, அருகில் இருந்த போக்குவரத்து காவல்துறையின் (Patrol) ரோந்து வாகனத்தின் மீது வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.

சீட் பெல்ட் அணியாமல் காரை ஒட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதால் ரியாஸ்க்கு மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியதாக கூறப்படுகிறது. போலீசாரிடம் தன்னை யார் அடித்தது எனக் கூறி ரியாஸ் அகமது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து குடிபோதையில் வாகனத்தை இயக்கியதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், உரிய ஆவணங்களை காட்டாததற்கு 500 ரூபாய் மற்றும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காததற்கு 1,500 ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டது. குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதற்காக பாண்டி பஜார் போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டு உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details