கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் பைன் செட்டியா மலர்கள்! - tami nadu
Published : Oct 21, 2023, 11:35 AM IST
திண்டுக்கல்:கொடைக்கானலில் இரண்டாவது சீசனை வரவேற்கும் விதமாக சிவப்பு நிற வண்ணத்தில் பூத்துக் குலுங்கும் பைன் செட்டியா மலர்களால் எழில் கொஞ்சி உள்ளது. பல வண்ணங்களில் கொடைக்கானலை அலங்கரிக்கும் மலர்களைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மாதம் துவங்கி மே, ஜூன் மாதம் நிறைவடையும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து மகிழ்வதுண்டு.
ஒவ்வொரு வருடமும் கொடைக்கானலின் இரண்டாவது சீசன் அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும். தற்பொழுது கொடைக்கானலில் இரண்டாவது சீசனை வரவேற்கும் விதமாக கொடைக்கானலில் ஏரிச்சாலை, செண்பகனூர், பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிவப்பு நிறத்தில் இலை வடிவிலான இதழ்கள் கொண்ட பைன் செட்டியா மலர்கள் பூத்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த சிவப்பு நிற மலர்களைக் காண சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.