பிச்சைக்காரன் 2 ரிலீஸ் எஃபெக்ட் - 2000 ரூபாய் செல்லாதது குறித்து விஜய் ஆண்டனி கருத்து! - 2000 ரூபாய் செல்லாது
சென்னை:தமிழ் சினிமாவில்இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் கதாநாயகராக வலம் வருபவர், விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் தற்போது வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம், மே 19-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், விஜய் ஆண்டனி அம்பத்தூரில் உள்ள திரையரங்கில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் காண வந்தவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ரசிகர்களை அழைத்து கேக் வெட்டி மகிழ்ந்தார். அப்போது விஜய் ஆண்டனி பேசுகையில், விரைவில் பிச்சைக்காரன் 3 வெளியாகும் என்னும் தகவலைத் தெரிவித்தார். பின்னர், பிச்சைக்காரன் படத்தில் வரும், ‘நூறு சாமிகள் இருந்தாலும் அம்மாவும் உன்னைப்போல் ஆகிடுமா’ எனும் பாடலைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2000 ரூபாய் செல்லாது என அறிவிக்கபட்டது குறித்த கேள்வி எழுந்தது. அதற்கு, “பணத்தினை பதுக்கி வைத்திருப்பவர்கள் வருத்தப்படுகின்றனர். பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:HBD Balu Mahendra: பல தலைமுறைகள் கடந்து ஒளிரும் ஒளிக்கலைஞன் பாலுமகேந்திரா