அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் செல்ல தடையா? கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை!
தூத்துக்குடி:திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்ல மதுரை அரசு பேருந்தில் ஏறிய மாற்றுத்திறனாளிகள் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாகளிகள் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டது காண்போரை கலங்கச் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள சிங்கத்தாகுறிச்சி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பொன்னுத்தாய் மற்றும் அவரது சகோதர் நாகராஜ். இருவரும் பொன்னுத்தாயின் மகள் மகாலட்சுமி உதவியுடன் திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர்.
சுவாமி தரிசனம் செய்து விட்டு நாழிக்கிணறு பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் தூத்துக்குடி செல்வதற்காக ஏறி அமர்ந்து உள்ளனர். அப்போது வந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரும், அவர்களை பேருந்தில் ஏற்ற மறுத்து இறக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது மாற்றுத்திறனாளிகள் என்றும் பாராமல் அவர்களது குறைபாடுகளை சுட்டிக்காடு கடுமையான வார்த்தைகளால் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாற்றுத்திறனாகள் பேருந்தில் இருந்து இறக்கி உள்ளனர். பேருந்தில் ஏற்ற மறுத்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி சமூக ஆர்வலர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க:போலி பாஸ்போர்ட் தயாரித்த தலைமறைவு குற்றவாளி சென்னையில் சிக்கியது எப்படி?