வீடியோ: அடேங்கப்பா.. லாரி டியூபில் கள்ளச்சாராயம் கடத்தல் - திருப்பத்தூர் மாவட்ட செய்தி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தமிழ்நாடு-ஆந்திரா மாநில எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனம் மூலம் லாரி டியூப்பை கொண்டு சென்ற நபரை நிறுத்த முயன்றபோது, அந்த நபர் டியூப்பையும், வாகனத்தையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்.
இதையடுத்து லாரி டியூப்பை சோதனை செய்தபோது அதில் கள்ளச்சாராயம் நிரப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடியவர் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வீடியோ: வாணியம்பாடி ஸ்ரீ அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை திருவிழா