தமிழ்நாடு

tamil nadu

ஒரு குவாட்டருக்காக இரும்பு வேலியை வண்டியில் கட்டி இழுத்து சென்ற குடிமகன்

ETV Bharat / videos

ஒரு குவார்ட்டருக்காக இரும்பு வேலியை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற குடிமகன்; வைரலாகும் வீடியோ! - திண்டுக்கல் மாவட்ட செய்தி

By

Published : Jun 19, 2023, 7:51 AM IST

திண்டுக்கல்: எரியோட்டில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பழைய இரும்பு வேலியை கயிறு மூலம் கட்டி நடுரோட்டில் இழுத்துச் சென்றுள்ளார். அவ்வழியே சென்ற மற்றொரு வாகன ஓட்டி அவரிடம் பேச்சு கொடுத்து அதனை அவரே வீடியோ எடுத்துச் சென்றுள்ளார். 

அப்போது அவரிடம் இந்த இரும்பு வேலியை எங்கிருந்து, எதற்கு கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு பூத்தாம்பட்டியில் இருந்து வேடசந்தூருக்கு மது வாங்க கொண்டு செல்வதாகவும், ஒரு பாட்டிலின் விலை 140 ரூபாய் என்றும், இந்த இரும்பு வேலியை பழைய இரும்புக் கடையில் 160 ரூபாய்க்கு வாங்கி கொள்வார்கள் என்றும் சிரித்தவாறு பதிலளித்தார். 

பின்னர் அந்த வீடியோவை எடுத்த இளைஞர் ஒரு குவார்ட்டர் போதுமா? என்று கேட்டதற்கு போதும் எனப் பதில் அளித்தார். மேலும் மதுப் பிரியர் செய்த செயல் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் மது குடிப்பதற்காக கடைவீதியில் இரும்பு வேலியுடன் அட்ராசிட்டி செய்த அந்த நபரால், பின் தொடர்ந்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர்.

இதையும் படிங்க: பிளம்ஸ் பழ சீசனில் குறைந்த விளைச்சல்; கொடைக்கானல் விவசாயிகள் வேதனை..

ABOUT THE AUTHOR

...view details