தமிழ்நாடு

tamil nadu

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் 97.67% பெற்று முதலிடம்

ETV Bharat / videos

SSLC Result: தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் 97.67% பெற்று முதலிடம்! - பெரம்பலூர்

By

Published : May 19, 2023, 2:39 PM IST

பெரம்பலூர்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். அதில் சுமார் 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்; 91.39 சதவீதமாகவும் உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

4 லட்சத்து 30 ஆயிரத்து 710 பேர் மாணவியர்கள் தேர்ச்சி பெற்று, 94.66% மாணவியர்களின் தேர்ச்சி சதவீதமாக உள்ளது. 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 88.16% தேர்ச்சி சதவீதமாக உள்ளது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் அதிகளவு தேர்ச்சி விகிதம் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 143 பள்ளிகளில் 4,288 மாணவர்களும், 3,905 மாணவிகள் என மொத்தம் 8,193 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,135 பேர் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தில் அதிக அளவாக 97.67% பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றிருந்த நிலையில்  இந்தாண்டு முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், முதலிடம் பெற பாடுபட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும், மாணவ - மாணவிகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: TN SSLC Result: வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; வழக்கம்போல் மாணவியர் தேர்ச்சி அதிகம்!

ABOUT THE AUTHOR

...view details