Video:செளனாம்மாள் கோயில் திருவிழா- பூசாரியிடம் சாட்டையடி வாங்கிய பக்தர்கள் - செளனாம்மாள் கோயில் திருவிழா
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தில் அமைந்துள்ளது செளனாம்மாள் திருக்கோயில். இங்கு மஹா கணபதி ஹோமத்தோடு பெரும் பூஜை விழா தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் சாட்டையடி வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. சக்தி அழைக்கப்பட்டு பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கினர். தொடர்ந்து கிடா வெட்டுதல் பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST