மழை வேண்டி பிரார்த்தனை... ஊரே தீர்த்தக்குடம் எடுத்து வேண்டுதல்! - etv bharat tamil
Published : Aug 29, 2023, 12:19 PM IST
ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் ராகி, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். கடம்பூர், மாக்கம்பாளையம், குன்றி, கோவிலுர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி சாகுபடி என்பதால் மழையை எதிர்ப்பார்த்து 3 மாத பயிரான மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் மாக்கம்பாளையம் மலைக்கிராமத்தில் சாகுபடி செய்த மானாவாரி பயிர்கள் தண்ணீரின்றி வாடுகின்றன. மேலும் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து வருவதால் கால்நடைகளுக்கு குடிநீர் தேவை கேள்வி குறியாவதால் மாக்கம்பாளையம் ஊர்மக்கள் மழை வேண்டி வழிபாடு நடத்தினர். அதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் பெண்கள் ஊர்வலமாக புதனி நீர் எடுத்து வந்து விநாயகர் சிலைக்கு ஊற்றி வணங்கினர்.
அதனைத் தொடர்ந்து பெண்கள் பத்தரகாளியமன் கோயிலுக்குச் சென்று நேர்த்த்திக்கடன் செலுத்தி மழை வேண்டி வழிபட்டனர். மழையில்லாமல் சாகுபடி செய்த பயிர்கள் வாடுவதால் மக்கள் மழை வேண்டி வழிபட்டதாக அப்பகுதி மக்கள் பக்தர்கள் தெரிவித்தனர். தற்போது மழை வேண்டி ஒரு ஊரே தீர்த்தக்குடம் எடுத்து வழிபாடு செய்தது பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.