மிக்ஜாம் புயல் எதிரொலி..! உதகையில் கடும் பனி மூட்டம்; பகலே இரவு போல் ஆனதால் வாகன ஓட்டிகள் அவதி!
Published : Dec 4, 2023, 2:15 PM IST
நீலகிரி: மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கன மழையானது பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அதிகாலை முதலே காற்றுடன் கூடிய சாரல் மழை மற்றும் கடும் பனி மூட்டமாக காணப்படுகிறது.
குறிப்பாக உதகை நகரில் தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ் மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம், உதகை - கோவை சாலைகளில் பகல் நேரமே இருள் போல காட்சி அளிப்பது போல் பனி மூட்டம் கடுமையாக சூழ்ந்துள்ளன. சாலைகளே தெரியாத அளவிற்கு பனி மூட்டம் சூழ்ந்துள்ள காரணத்தால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், கடும் குளிர் நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில், விலகாமல் தொடர்ந்து வரும் பனி மூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்..!