தமிழ்நாடு

tamil nadu

மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து சாலை மறியல்

ETV Bharat / videos

மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து மக்கள் சாலை மறியல்..! திருவண்ணாமலையில் நடப்பது என்ன? - people proest against cutting trees

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 8:42 PM IST

திருவண்ணாமலை:அவலூர்பேட்டை - திருவண்ணாமலை இடையேயான சாலை விரிவாக்க பணி, பகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. இதற்காக நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்கள் வெட்டி அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மங்கலம் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே நெடுஞ்சாலை துறையினர் சாலை ஓரங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக அளவீடு செய்தனர். தொடர்ந்து, வெட்டப்பட வேண்டிய மரங்களை குறியிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குறியிடப்பட்ட மரங்களை வெட்ட இன்று (செப்.18) பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் மரங்களும் வெட்டப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டி, நெடுஞ்சாலைத் துறையினரை கண்டித்து திருவண்ணாமலை அவலூர்பேட்டை இடையேயான சாலையில் மங்கலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மரம் வெட்டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

ABOUT THE AUTHOR

...view details