தமிழ்நாடு

tamil nadu

குதுகலமாய் ஆரம்பிக்கப்பட்ட ஏ.ஆர் ரகுமான் கச்சேரி..கொதித்தெழுந்த ரசிகர்கள்!

ETV Bharat / videos

AR Rahman concert: குதுகலமாய் ஆரம்பிக்கப்பட்ட ஏ.ஆர் ரகுமான் கச்சேரி.. கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்ன சொல்கிறார்கள்? - concert amount refund

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 2:08 PM IST

Updated : Sep 11, 2023, 5:14 PM IST

சென்னை:பனையூரில் நேற்று (செப்.11) நடைபெற்ற ஏ ஆர் ரகுமான் “மறக்குமா நெஞ்சம்”  இசை நிகழ்ச்சிக்கு பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் ரசிகர்களை உள்ளே அனுமதிக்காததால் விரக்தியில் விழா ஏற்பாட்டாளர்களை திட்டிக்கொண்டே ரசிகர்கள் சென்றனர்.

டிக்கெட் பெற்ற ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் என பணம் கொடுத்து நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்கள் பலர் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஏ.ஆர் ரகுமான் உரிய பதில் கொடுக்க வேண்டும்ம் என மக்கள் X தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், தற்போது ஏ.ஆர் ரகுமான் தனது X தளத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார். 

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர். ரசிகர்கள் பலர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் இதற்கு உரிய பதில் தர வேண்டும் எனவும், ஏ.ஆர் ரகுமான் இப்படிபட்ட மனிதர்களுடன் சேர்ந்தால் அவருக்கு தான் நல்லது இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Sep 11, 2023, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details