ராணுவ சாலையில் நடமாடிய காட்டெருமை; அடர்வனத்தில் விட மக்கள் கோரிக்கை - குன்னூர்
நீலகிரி: குன்னூர் அருகே பிளாக் பிரிட்ஜ் ,பேரக்ஸ், வெலிங்டன், சின்ன வண்டி சாேலை, உள்ளிட்ட பகுதிகள்் ராணுவ பயிற்ச்சி முகாம்கள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதி. இங்கு சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டெருமைகள் கூட்டம் அதிகம் உள்ளன, இந்நிலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த காட்டெருமை ஒன்று உணவு, தண்ணீர் தேடி ராணுவ முகாம் சாலையில் நுழைந்தது. இந்த சாலை ராணுவ பகுதி என்பதால் அடிக்கடி முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதால் விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளது. எனவே இந்த காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST