Watch Video: ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு : குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை - ஒகேனக்கல்லில் வெள்ளம்
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று(ஆக.1) முதல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவிரிக் கரையோர பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநில காவிரிக் கரையோரப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் தமிழ்நாடு எல்லையான பிலி குண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஐவர் பவனி பகுதியையும் தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. ஒகேனக்கல்லில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST