விழுப்புரம்: மேம்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.. வாகன ஓட்டிகள் அச்சம்!
Published : Nov 8, 2023, 3:47 PM IST
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அடுத்த ஏ.கே (ஆணைகவுண்டன்) குச்சிபாளையம் பகுதியில் மலட்டாரின் குறுக்கே விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வசதியாக தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தல் பணி நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த பணியின் போது, புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக, இந்த பாலத்தினை ஒட்டியவாறு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென 15 அடி அளவில் ஒரு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாலத்திற்கு கீழே ஆற்று நீர் செல்லும் நிலையில், கீழே மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தேசிய நெடுஞ்சாலை அருகில் 15 அடி பள்ளம் ஏற்பட்டு பாலத்தைச் சுற்றி விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் விபத்துக்கள் ஏற்படும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்!