நோயாளிகளை வெளியில் நிற்க வைத்து மருத்துவம் பார்த்த மருத்துவர் .. வைரல் வீடியோ - GH in Villupuram
விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் கிராமத்தில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை வெளியே நிற்க வைத்து மருத்துவம் பார்க்கும் பெண் மருத்துவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், பெண் மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, “நோயாளிகள் மாஸ்க் அணியாமல் வருகின்றனர். நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்பதால் வெள்யே நிற்க வைத்து பார்த்தேன் ்” என பெண் மருத்துவர் பதிலளித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST