தமிழ்நாடு

tamil nadu

தூய பனிமய மாதா பேராலயத்தின் 441 வது ஆண்டு திருவிழா

ETV Bharat / videos

தூய பனிமய மாதா பேராலயத்தின் 441வது ஆண்டு திருவிழா:நற்கருணை பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு! - panimaya matha church festival 2023

By

Published : Jul 31, 2023, 9:57 PM IST

தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 441-வது ஆண்டு திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாவை முன்னிட்டு பனிமயமாதா பேராலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது. பனிமயமாதா ஆலய வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திவ்ய நற்கருணை பேழையை தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை கைகளில் ஏந்தி, தூத்துக்குடி நகர் முழுவதும் பவனியாக கொண்டுவரப்பட்டு, பனிமய மாதா ஆலயம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு அருள் ஆசி உரை வழங்கப்பட்டது.

இந்த நற்கருணை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடந்து கலந்து கொண்டனர். இந்த திருவிழாவின் முக்கிய திருவிழாவான பத்தாவது திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி பனிமய மாதாவின் தங்கத் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details