தமிழ்நாடு

tamil nadu

பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திரத் திருவிழா

ETV Bharat / videos

பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திரத் திருவிழா! - திண்டுக்கல் மாவட்ட செய்தி

By

Published : Mar 29, 2023, 7:42 PM IST

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு காலை 10.45 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானை மற்றும் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ஆம் நாள் திருவிழாவாக வருகிற ஏப்ரல் 3ஆம் தேதியும், பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏழாம் நாள் திருவிழாவாக வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி புதன்கிழமை அன்றும் நடைபெறுகிறது. 7ஆம் தேதியன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழாவும் நிறைவடைகிறது. 

திருவிழா முதல் நாளான இன்று காசி, கயா, திரிவேணி சங்கமம், கொடுமுடி ஆகிய ஊர்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டு வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோயில் நிர்வாகம் மற்றும்‌ மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. 

கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோயில் அறங்காவலர் குழுவினர், இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் நகர முக்கியப் பிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details