பழனியில் பக்தர்களால் பணமழை- ஒரே மாதத்தில் ரூ 3 கோடி காணிக்கை - Palani hundiyal counting
பழனி முருகன் கோவிலுக்கு கோடை விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மலைமீதுள்ள கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. காணிக்கை வரவாக ரொக்கம் மூன்று கோடியே நாற்பது லட்சத்து 41 ஆயிரத்து 565 ரூபாய் ( 3,40,41,565), தங்கம் 1644 கிராம், வெள்ளி 22,817 கிராம், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 393 கிடைத்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST