மதுரை மாநாடு வெற்றியடைய ’பழனிக்கு பால்குடம்’ எடுத்த அதிமுகவினர் - today tamil news
திண்டுக்கல்:அதிமுக மாநாடு வெற்றியடைய வேண்டும் என பழனியில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின் அதிமுகவின் முதல் மாநில மாநாடு நாளை மதுரையில் நடைபெறவுள்ளது.இதற்காக மாநாட்டு மேடை, தொண்டர்களுக்கு உணவு வழங்கும் இடம்,கழிப்பிட அறைகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் போன்றவை அனைத்தும் தயார்நிலையில் உள்ளது. மேலும் மாநாடு பந்தல் வளாகத்தில் தொண்டர்கள் அமருவதற்காக 3 லட்சம் வரையிலான நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரலையில் பார்ப்பதற்கு வசதியாக ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுப் பந்தலைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட இடங்களில் மேடைகள் அமைத்து விதவிதமான கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாளை மதுரையில் நடைபெறும் மாநாடு வெற்றி பெற வேண்டும் எனவும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஆக வேண்டும். என பழனி அதிமுக நகர கழகம் மற்றும் 28 வது வார்டு சார்பில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்தனர். .அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏ ,தொண்டர்கள் உட்பட ஏரளமானேர் கலந்துகொண்டனர்.