தமிழ்நாடு

tamil nadu

பெயிண்ட்

ETV Bharat / videos

பெயிண்ட் இல்லாமல் படம் வரையலாமா! எப்படி? ஓவிய ஆசிரியரின் விழிப்புணர்வு வீடியோ!

By

Published : Mar 22, 2023, 11:08 AM IST

கள்ளக்குறிச்சி:சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் செல்வம். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெயிண்ட், கலர் ஏதும் பயன்படுத்தாமல், 

"நீர் இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் 

வான் இன்றி அமையாது ஒழுக்கு" 

என்ற குறளுக்கு ஏற்ப வெறும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி திருவள்ளுவர் படத்தை வரைந்து உள்ளார்.

"நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்றி அமையாது ஒழுக்கு" நீர் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை என்கிறார் திருவள்ளுவர். உணவின்றி மனிதனால் சில நாட்கள் வாழ முடியும். ஆனால் நீரின்றி 3 தினங்கள் கூட வாழ முடியாது. நீரின் அளவு குறைந்து வருதல், நீர் மாசடைதல் போன்ற காரணங்களால் நீர் பாதுகாப்பு உலகளாவிய ரீதியில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 உலக நீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 

நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தினால் மாத்திரமே எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்த முடியும், ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைப்பது நீரை சேமிப்பதற்கான பிரதான வழியாகும். மழையை உருவாக்குவதற்கு மூல காரணமாக விளங்குபவை காடுகள், ஆகவே காடுகளை அழிக்காமல் பாதுகாப்பதும் மிகவும் அவசியம் நீரை பற்றிய பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் பெயிண்ட், கலர் எல்லாம் வேண்டாம்பா "நீரின்றி அமையாது உலகெனின்" என்கிற திருகுறளுக்கு ஏற்ப "தண்ணீர்" மட்டுமே பயன்படுத்தி திருவள்ளுவர் படத்தை எட்டு நிமிடங்களில் வரைந்து அசத்தி உள்ளார். 

ABOUT THE AUTHOR

...view details