'தர்மம் வெல்லும்' எழுத்தில் உருவான விஜயகாந்த் ஓவியம்.. நூதன முறையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஓவியர்! - வறுமை ஒழிப்பு தினம்
Published : Aug 25, 2023, 10:18 PM IST
திண்டுக்கல்:நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான் விஜயகாந்தின் 71-வது பிறந்தநாள் விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும், விஜயகாந்த் பிறந்தநாளை தேமுதிகவினர் வறுமை ஒழிப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த தேமுதிக தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பழனியை சேர்ந்த ஓவியர் சின்னப்பா என்பவர் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "தர்மம் வெல்லும்" என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே பயன்படுத்தி விஜயகாந்தின் உருவத்தை ஓவியமாக வரைந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தர்மம் வெல்லும் என்ற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி 10 அடி நீளம் மற்றும் 10 அடி அகலத்திற்கு விஜயகாந்தின் ஓவியம் வரைந்துள்ளதும், மேலும் அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டி ஓவிய சிகிச்சை அளித்ததும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஓவியர் சின்னப்பா வரைந்த இந்த ஓவியத்தை தேமுதிகவினர் மட்டுமின்றி விஜயகாந்த் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.