பகல் இரவு நாளில் பிரமிப்பூட்டிய பத்மநாபசாமி கோயில் - கோபுரத்தின் வாதில்களில் அதிசய ஒளி
மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23ஆகிய தேதிகளில் சூரிய ஒளி சரியாக பூமியின் மத்திய ரேகைப் பகுதியில் படுவதால் நமக்கு சம பகல் இரவு ஏற்படுகிறது. இதை நாம் பகல் இரவு நாள் என்று அழைக்கிறோம். அதன்படி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயிலில் சூரியன் சரியாக 5 வாதில்களிலும் கடந்து செல்வது காண்போரை பிரமிப்படைய செய்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பகல் இரவு நாளையும் கணித்து நம் முன்னோர்கள் நவீனமாக கட்டடக் கலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST