மூணாறு குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் இறங்கிய படையப்பா யானை! - Idukki district in kerala
Published : Nov 21, 2023, 4:31 PM IST
மூணாறு:கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமான படையப்பா யானை மீண்டும் மூணாறு குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருகிறது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு சென்ற படையப்பா யானை, தற்போது மீண்டும் மூணாறு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சுற்றி திரிந்து வருகிறது.
கடந்த முறை மூணாறு பகுதிக்குள் புகுந்த படையப்பா யானை, அங்கிருந்த ரேஷன் கடை மற்றும் மளிகை கடைகளை உடைத்து உணவுகளை உண்டுச் சென்றது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை இந்த யானை கடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில மாதங்களாக மூணாறு பகுதியில் காணப்படாத நிலையில் படையப்பா யானை தற்போது மூணாறு பகுதியில் உள்ள எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொது மக்களின் வீடுகளை உடைத்து அச்சுறுத்தி வருகிறது. மேலும் ஆபத்தை உணராத பொதுமக்கள் படையப்பா யானையினை படம் பிடிக்கவும் அதன் முன் நின்று வீடியோ எடுக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.