ஸ்ரீ படவேட்டம்மன் கோயில் ஆடிமாத பெருவிழா - 1008 பால் குடங்களால் அம்மனுக்கு நேர்த்திக் கடன்!
வேலூர்: வாலாஜாபேட்டையில் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோயிலில் 44ஆம் ஆண்டு ஆடிமாத நான்காம் வெள்ளி பெருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 1008 பால் குடங்களை தலையில் சுமந்து அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர்.
திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான பூ கரகத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அனைவரும் பால் குடத்தை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக கோயிலை வந்தடைந்த பின்னர் கருவறையில் உள்ள படவேட்டம்மனுக்கு அனைவரும் பால் அபிஷேகம் செய்தும், மஹா தீபாரதனை காண்பித்தும் ஒம்சக்தி, பராசக்தி, என பக்தி கோஷங்களை எழுப்பியும் அம்மனை வழிப்பட்டு சென்றனர்.
மேலும் இந்த ஆடிமாத பால்குட திருவிழாவில் இளைஞர்கள் ஏராளமானோர் உடலில் அலகு குத்திக் கொண்டும், வாகனத்தில் உற்சவர் அம்மன், சிவன், காளி, போன்ற தெய்வங்களை பல்வேறு பூ அலங்காரத்தை கொண்டு வடிவமைத்து அவற்றை இழுத்து சென்றும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
இதையும் படிங்க:சொத்துத் தகராறில் அண்ணன் மகனை கொலை செய்த நபர் - நடந்தது என்ன?