அழகு ராணிக்கு 3வது பிறந்தநாள்.. கேக் வெட்டி கொண்டாடிய உரிமையாளர்! - cow birthday by cutting a cake in vellore
Published : Nov 6, 2023, 7:43 AM IST
வேலூர்:எருது விடும் திருவிழாவில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு 3ஆம் ஆண்டு பிறந்த நாளை கேக் வெட்டி உரிமையாளர் கொண்டாடி உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாலப்பேட்டை பகுதியில் வசித்து வரும் பாண்டியன். இவர் அழகுராஜா, அழகு ராணி, ஓம் சக்தி, என்று மூன்று மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த மாடுகள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில், பல்வேறு மாவட்டங்களில் எருது விடும் திருவிழாக்களில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், பாண்டியன் வளர்த்து வரும் அழகு ராணி என்ற மாட்டின் 3ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, ஓம் சக்தி மற்றும் அழகு ராஜா என்ற இரண்டு மாடுகளுக்கும் சேர்த்து ஒன்றாக மூன்று மாடுகளையும் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு சென்று, ஊர் நடுவில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
பின்னர் மாடுகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாடுகளுக்கும் சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சில மாதங்களுக்கு முன் இவர் வளர்த்து வரும் அழகுராணி என்ற மாட்டிற்கு வளைகாப்பு செய்து கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது. மாட்டின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.