தமிழ்நாடு

tamil nadu

குன்னூர் சிம்ஸ் பூங்கா 63-ஆவது பழக் கண்காட்சிக்கு ஆஸ்கர் வென்ற பொம்மன் - பெள்ளி தம்பதி வருகை!

ETV Bharat / videos

உதகை 63-ஆவது பழக் கண்காட்சியில் ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு மரியாதை! - தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன்

By

Published : May 28, 2023, 2:31 PM IST

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில், இந்த ஆண்டு கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியான 63-ஆவது பழக் கண்காட்சி நேற்று துவங்கியது. தோட்டக் கலைத் துறை சார்பில் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் விதமாகப் பூங்கா நுழைவுவாயிலில் 12 அடி உயரத்தில் பலாப்பழம், பம்பளிமாஸ், வாழை, எலுமிச்சை, அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம் உள்ளிட்ட 1.5 டன் அளவிலான பழங்களைக் கொண்டு அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், 18 அடி உயரம் 5 அடி அகலத்தில் பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மெகா சைஸ் பைனாப்பிள், பழங்களால் ஆன பழக்கூடை, மண் புழு, பிரமிடு, மலபார் அணில், உள்ளிட்ட உருவங்களை அமைத்துள்ளனர். மேலும், இவ்விழாவிற்கு எலிபன்ட் விஸ்பரஸ் ஆவண படத்தில் ஆஸ்கர் விருது வென்ற பொம்மன் - பெள்ளி தம்பதி வருகை புரிந்தனர். 

இவர்களுக்குத் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார். மேலும் அமைச்சர் உரையாற்றுகையில், நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் மற்றும் சுற்றுலா துறை இரண்டும் இரு கண்களைப் போன்றது என்றும் இவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தேயிலைக்கு உரிய விலை கிடைக்கவும், சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். அதனைத் தொடர்ந்து, 148 ஆண்டுகளுக்கு முன் JD சிம் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த சிம்ஸ் பூங்காவில், ஆண்டுதோறும் அஞ்சு புள்ளி 5.8 லட்சம் பேர் வந்து செல்வதாகவும், பூங்காவைப் புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:திராவிட மாடல் பெயரில் ஸ்டாலின் தான் 'மாடல் போல்' சுற்றுகிறார்- பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

ABOUT THE AUTHOR

...view details