தமிழ்நாடு

tamil nadu

ஓபிஎஸ் தலைமையிலான திருச்சி மாநாட்டுக்கு சசிகலாவுக்கு அழைப்பு!

ETV Bharat / videos

ஓபிஎஸ் தலைமையிலான திருச்சி மாநாட்டுக்கு சசிகலாவுக்கு அழைப்பு! - திருச்சி மாநாடு

By

Published : Apr 9, 2023, 9:56 PM IST

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் செல்வதற்காக  சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், “திருச்சியில் ஏப்ரல் 24ஆம் தேதில அதிமுக சார்பில், எனது தலைமையில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சி உருவாகி 50 ஆண்டுகள் வெற்றியைக் கண்டது மற்றும் அதிமுக தனது 51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கு முன் எங்களிடம் இணைந்து இருந்த மூத்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் அறிக்கையின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படும்” என தெரிவித்தார். மேலும் ஸ்டெர்லைட் குறித்த கேள்விக்கு, நடந்து முடிந்த கதை என கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். 

ABOUT THE AUTHOR

...view details