ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என தீர்ப்பு: தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை மறியல்! - Theni MP
தேனி:தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி அதே தொகுதியை சேர்ந்த சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அ
ந்த மனுவில் ஓ.பி.ரவீந்திரநாத் அதிகார துஷ்பிரயோகம் செய்தது, வங்கிக்கடனை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது, பிரமாணப் பத்திரத்தில் திருத்தம் மேற்கொண்டது, தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றது என பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டிருந்தார்.
வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஓ.பி.ரவீந்தரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்ததோடு, அவரது தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து மிலானியை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுகவினர் பெரியகுளம் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.
இதையும் படிங்க:ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்... ராகுல், கார்கே தலைமையில் ஆலோசனை... சூடுபிடிக்கும் தேர்தல் களம்!