வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட சிவப்புக்கம்பள வரவேற்பா?... யோகியின் புதிய சர்ச்சை - உத்தர பிரதேச மாநிலம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில், மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று வாரணாசி சென்று படகு மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். படகில் இருந்து இறங்கிய பிறகு, அவரை சிவப்பு கம்பளம் விரித்து அழைத்துச்சென்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளைக்காண சிவப்பு கம்பளம் விரித்து நடந்து சென்ற யோகி ஆதித்யநாத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST