தமிழ்நாடு

tamil nadu

கோடை சீசனுக்கு தயாராகி வரும் ஊட்டி ரோஜா பூங்கா

ETV Bharat / videos

கோடை சீசனுக்கு தயாராகி வரும் ஊட்டி ரோஜா பூங்கா..!

By

Published : Mar 12, 2023, 2:34 PM IST

சமவெளி பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க 4.48 ஏக்கர் பரப்பளவில் 32 ஆயிரம் ரோஜா செடிகளை கொண்ட ரோஜா பூங்கா தற்போது கோடை சீசனுக்கு தயாராகி வருகிறது.

இந்தப் பூங்காவில் நீரூற்றுக்கள், கேஸி போஸ் நிழல் குடைகள், போவர்ஸ் போன்ற இட அமைப்புகளும் புல்வெளிகளும் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக 170 வகையிலான ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புளோரி பண்டா, பாலியாந்தா, ஹைபிரிட் டீ, கொடி ரோஜா போன்றவைகள் பூங்காவில் இடம் பெற்றுள்ளன.

வெர்மிலியன், வெள்ளை, மஞ்சள், சிகப்பு, நீளம், இளஞ்சிவப்பு நிறங்கள் அடிப்படையில் ரோஜா செடிகளும் இங்கு உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கோடை சீசனுக்கு ரோஜா கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த கண்காட்சியின் போது ரோஜா வடிவில் கார்ட்டூன் பொம்மைகள் இந்தியாவின் முக்கிய நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.

இந்த கண்காட்சியைக் காண வெளிநாடு மற்றும் வெளியூர் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் திரளானோர் இக்கண்காட்சியை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் வரும் கோடை சீசனுக்கு பூங்கா புதுப்பொலிவு படுத்தப்பட்டு ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. இந்த ரோஜா செடிகள் வரும் கோடை சீசனுக்கு ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்க பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details