திருப்பூரில் அரசு பேருந்து மோதி ஒருவர் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - CCTV footage
திருப்பூர்: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்லும் அரசு பேருந்து நேற்று சனிக்கிழமை (ஜூன் 17) இரவு 11:30 மணி அளவில் வெளியேறியது. அப்போது பேருந்து நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீது அதிவேகமாக வந்த பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் திருப்பூர் முத்தனம்பாளையத்தைச் சேர்ந்த பாலு (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார், தாராபுரத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநரான ஈஸ்வரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. மேலும் இந்த விபத்து மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:காமெடி நடிகரின் காலை உடைத்த பாஜகவினர் - மனைவி உள்பட 6 பேர் கைது