தமிழ்நாடு

tamil nadu

Etv Bharat

ETV Bharat / videos

தலைக்கேறிய போதையில் தறிகெட்டு ஓடிய கார்; நொறுங்கிய 10-க்கும் அதிகமான பைக்குகள்.. நடந்தது என்ன? - damaging bikes in Salem

By

Published : May 14, 2023, 7:24 PM IST

சேலம்:பரபரப்பாக இயங்கி வரும் சேலம் மாநகரில், சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை அசுரவேகத்தில் வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதி நொறுக்கியது. இதனால், அப்பகுதியில் இருந்த பலரும் அச்சமடைந்தனர். இருசக்கர வாகனங்களில் மோதி சிக்கிக்கொண்டு வெளியே நகர முடியாமல் நின்ற, அந்த காரை ஓட்டிய நபர் பயங்கரமான மதுபோதையில் இருந்தது பின்னர் தெரியவந்தது.

ரெட்டிபட்டி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நமச்சிவாயம். குடும்பத்துடன் துணிகள் வாங்குவதற்காக காரில் வந்துள்ளார். குடிபோதையில் இருந்த நமச்சிவாயம், குடும்பத்தினரை கடை முன் இறக்கி விட்டுவிட்டு, போதையில் தனது காரை தாறுமாறாக ஓட்டியுள்ளார். அதனால், சாலையில் வந்த வாகன ஓட்டிகள் மீது மோதிய அவர் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியதால் வாகனங்கள் சேதமடைந்தன. இதனால், கார் மேற்கொண்டு நகராமல் அப்படியே நின்றது.

வாகனங்கள் மீது மோதியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிபோதையில் இருந்த ஓட்டுநரை வெளிய வருமாறு கூச்சலிட்டபோதும், இறங்காத அவரை தகவலறிந்து விரைந்து வந்த சேலம் நகர காவல்துறையினர் வலுக்கட்டாயமாக காரிலிருந்து கீழே இறக்கினர். மதுபோதையில் தள்ளாடிய அவரை பின்னர், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆள்நடமாட்டம் மிகுந்த கடைவீதி பகுதியில் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய நபரை காவல்துறையினர் அழைத்துச் சென்று குடிபோதையில் கார் ஓட்டுவது மேலும் அஜாக்கிரதையாக வாகனத்தை ஆபத்து ஏற்படுத்தும் விதமாக ஓட்டுவது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இரவு முழுவதும் சேலம் டவுன் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட நமச்சிவாயம் மீது வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள்நடமாட்டம் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details