Thaipusam: சத்தியமங்கலம் முருகன் கோயிலில் காவடி தூக்கிய குழந்தை பக்தர்கள் - முருக பக்தர்கள்
ஈரோடு: தைப்பூசத்தையொட்டி, இன்று (பிப்.5) சத்தியமங்கலம் அடுத்த குமாரபாளையம் தவளகிரி முருகன் கோயிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனையொட்டி, தவளகிரி முருகருக்கு பாலாபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரத்துக்கு பின் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து காவடி எடுத்து வந்தனர்.
இதில், குழந்தைகள் ஆடிய காவடி ஆட்டம் பக்தர்களை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து கோயிலில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் முருகனை சாமி தரிசனம் செய்தனர். முருக பக்தர்கள் சாமி முன் அமர்ந்து, கந்தபுராணம் பாடி மகிழ்ந்தனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.