தமிழ்நாடு

tamil nadu

கோவையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடங்கியது!

ETV Bharat / videos

கோவையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடங்கியது! - உலக தாய்மொழி தினம்

By

Published : Feb 21, 2023, 2:28 PM IST

தமிழ் மொழியில் எழுதுவதற்கும், பேசுவதற்கும், அரசு உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் 1956ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி இயற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்ட நாளை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (பிப்.21) முதல் வரும் 28ஆம் தேதி வரை தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் முதல் நாளான இன்று கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார். 

இதில், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு தமிழில் கையொப்பம் இடுவோம், தமிழர் நாம் என்று கூறுவோம், தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது போன்ற பல தமிழ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தி பேரணி மேற்க்கொண்டனர். இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட இந்த பேரணி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் நிறைவடைந்தது.  

ABOUT THE AUTHOR

...view details