தண்ணீர் தேடிவந்த புள்ளிமான், திருப்பத்தூரில் மீட்பு - தண்ணீர் தேடி அலைந்த புள்ளிமான்
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப்பகுதியில் உள்ள அத்தனாவூர் கிராமத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் தண்ணீர் தேடி ஆண் புள்ளிமான் ஒன்று கிராமப்பகுதிக்கு வந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் இதுகுறித்து ஏலகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் புள்ளிமானை பிடித்து ஏலகிரி வனப்பகுதியில் விட்டனர். அப்போது நொடி பொழுதில் துள்ளி குதித்து காட்டிற்குள் சென்று மறைந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST