மீண்டும் சுற்றுலா பயணிகளுடன் களைகட்டிய சுருளி அருவி : சுற்றுலா பயணிகளுக்கான தடையை நீக்கிய வனத்துறை
தேனி:கம்பம் அருகே சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளதால், 2 நாட்களுக்குப் பிறகு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் இந்த சுருளி அருவி விளங்குகிறது. இந்த சுருளி அருவியில் குளிப்பதற்காக நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் அனுதினமும் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக, தேனி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாகவும் சுருளி அருவி பகுதியில் நீர்வரத்து அதிகம் காணப்பட்டதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்தனர் .
பின்னர் தற்போது தேனி மாவட்டத்தில் பரவலாக மழை குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது சுருளி அருவிக்கு வரக்கூடிய நீர் வரத்து குறைந்து சீராக செயல்பட தொடங்கியுள்ளது. இதனை அடுத்து இன்று முதல் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளிப்பதற்டு தடை விதிக்கப்பட்டிருந்ததையொட்டி, அந்த தடை நீக்கப்படுவதாக கம்பம் கிழக்கு வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் குளிக்க முடியாமல் தவித்த சுற்றுலா பயணிகள் தங்கள் வருகையை புரிந்து அதீத மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.