"விரைவில் சசிகலாவுடன் சந்திப்பு" - ஈபிஎஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்! - VK Sasikala
மதுரை:சென்னை செல்வதற்காக மதுரை விமானத்திற்கு வருகைத் தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விக்கு?: 'தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 20ஆம் தேதி தாக்கல் ஆக உள்ளது, தாக்கல் செய்த பின் எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்' என்றார்.
டிடிவி தினகரன், சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு?: 'வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் பயணிப்பேன். மேலும் சசிகலாவைக் கூடிய விரைவில் சந்திக்க உள்ளேன்' எனத் தெரிவித்தார்.
அதிமுக புதிய உறுப்பினர் அட்டை மற்றும் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு?: 'ஆரம்பத்திலிருந்தே அவருடைய நடவடிக்கைகள் இன்று வரை சட்ட நீதிக்குப் புறம்பானதாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு குறித்த கேள்விக்கு?: 'நாங்கள் மக்கள் தீர்ப்பை எதிர்கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் எனக் கூறினார்.
விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக கூறியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.