"இப்போதைக்கு நீட் தேவையில்லை" - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி! - அதிமுக மாநாடு
சென்னை: தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக திருச்சியிலிருந்து விமானத்தின் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை லீவு என்று கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார். தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம் "முடியட்டும் பார்க்கலாம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:"நீட்டுக்கு அப்போ ஆதரவு.. இப்போ உண்ணாவிரதம்.. திமுக போடும் நாடகம்.." எடப்பாடி பழனிசாமி!
அதனைத் தொடர்ந்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், நீட் தேவையா? தேவை இல்லையா? எனக் கேள்வி எழுப்பினால், இப்போதைக்கு நீட் தேவையில்லை என்று கூறினார். செய்தியாளர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரே வரியில் பதிலளித்து விட்டு ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து சென்றார்.
இதையும் படிங்க:"நீட் தேர்வில் மாணவர்களை வைத்து மாநில அரசு ஆதாயம் தேட பார்க்கிறது" - தமிழிசை குற்றச்சாட்டு!