தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் வடமாநில தொழிலாளர் சடலமாக மீட்பு!

ETV Bharat / videos

சேலத்தில் வடமாநிலத் தொழிலாளர் சடலமாக மீட்பு! - North Indian workers issue

By

Published : Mar 16, 2023, 9:47 PM IST

சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை அருகே உள்ள நரசிம்ம செட்டி ரோடு பகுதியில், அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் முட்புதருக்குள் கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அன்னதானப்பட்டி காவல் துறையினர், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் சேலம் செவ்வாய்பேட்டையில் இயங்கி வரும் தனியார் பருப்பு ஆலையில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தோராஜ் அன்சாரி (41). 

இவர் கடந்த இரண்டு நாட்களாக பருப்பு ஆலைக்கு வராமல் இருந்துள்ளார். அதேநேரம் அதிகளவில் மது அருந்தும் பழக்கம் உடையவராகவும் தோராஜ் அன்சாரி இருந்துள்ளார். மேலும் சடலமாக மீட்கப்பட்ட தோராஜ் அன்சாரியின் உடலில் ஆங்காங்கே ரத்தக் காயங்கள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

எனவே, இந்த விவகாரத்தில் தோராஜ் கொலை செய்யப்பட்டாரா அல்லது இறப்பிற்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில், உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் தனியார் பருப்பு ஆலை உரிமையாளர் ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளரின் சடலம் அருகே இருந்த அவருடைய செல்போன் உள்ளிட்டப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

ABOUT THE AUTHOR

...view details