குன்னூரில் திடீர் ரெய்டு.. 3 கடைகளுக்கு சீல்! - Banned plastics ride in Coonoor
நீலகிரிமாவட்டம் குன்னூர் சுற்றுலாத் தளங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதியில் நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகிப்பதாக வருவாய்த் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து திடீர் ஆய்வு செய்த குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார், மூன்று கடைகளுக்கு சீல் வைத்து, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
முக்கியமாக, குன்னூர் அருகே உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான டால்பின் நோஸ் பகுதியில், நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதாக வருவாய்த் துறைக்கு கிடைத்த தகவலினால், திடீரென குன்னூர் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக, குன்னூரில் உள்ள 3 கடைக்கு சீல் வைத்தார்.
அதேபோல் அருகில் இருந்த மூன்று குடோன்களுக்கு சீல் வைத்து, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால் அபராதம் விதிப்பதோடு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம், அரசு மதுபானக் கடை சுகாதாரம் இன்றி செயல்பட்ட காரணத்திற்காக சீல் வைக்கப்பட்ட சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.