தமிழ்நாடு

tamil nadu

புதுமணத் தம்பதியினர் அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கி திருமணத்தை கொண்டாடினர்

ETV Bharat / videos

புதுமணத் தம்பதியினரின் புது வித முயற்சி.. ஈரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்! - newlywed couple celebrates their wedding

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 7:18 AM IST

ஈரோடு: திருமணமான கையோடு புதுமணத் தம்பதியினர் அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, உணவு வழங்கி திருமணத்தைக் கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். முதுகலை பட்டதாரியான இவருக்கும், ஈரோடு மாவட்டம், பவானி அருகே ஊராட்சி கோட்டை பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் நேற்று (நவ.24) திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, புதுமணத் தம்பதியினர் திருமணத்தை உற்சாகமாக, புதுவித முறையில் கொண்டாடும் வகையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகள், உள் நோயாளிகளுடன் இருப்பவர்கள் மற்றும் சாலையோரம் ஆதரவின்றி உள்ளவர்கள் என 500க்கும் மேற்பட்டோருக்கு இரவு உணவு வழங்கி தங்களது திருமணத்தைக் கொண்டாடினர்.

மேலும், இது போன்று உணவு அளிப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதுடன், ஒரு விதமான உணர்வைத் தருவதாக புதுமணத் தம்பதியினர் தெரிவித்தனர். திருமணம் முடிந்த நாளில், 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு அளித்து கொண்டாடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டுக்களைப் பெற்றதுடன் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details