தமிழ்நாடு

tamil nadu

திருவாரூரில் தாலி கட்டிய கையுடன் குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதிகள்

ETV Bharat / videos

தாலி கட்டிய கையுடன் குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதிகள்! - சமூக வலைதளங்களில் வைரல்

By

Published : Jun 2, 2023, 6:46 PM IST

திருவாரூர்:அனைவரது மத்தியிலும் தற்போது  திருமணம் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்றைய தலைமுறையினர் திருமணத்தை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்துச் சென்றுள்ளனர். புது புது வகைகளில் இன்றைய இளந்தலைமுறையினர் வித்தியாச வித்தியாசமாக தங்களது திருமணத்தை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் திருவாரூரில் மணப்பெண் மற்றும் மணமகன் தாலி கட்டிய கையோடு கூலிங் கிளாஸுடன் க்யூட்டாக குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

திருவாரூர் மாவட்டம் அக்கரைக் கோட்டகம் பகுதியைச் சேர்ந்த சேகர் கொளஞ்சி தம்பதியினரின் மகன் விஜய். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மலர் தம்பதியினரின் மகள் அம்சவள்ளி. இவர்கள் இருவருக்கும் அக்கரைக்கோட்டகம் பகுதியில் உள்ள மழை மாரியம்மன் ஆலயத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணம் முடிந்தவுடன் மணமகன் வீட்டில் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 

அப்போது உறவினர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது புது மணத் தம்பதிகள் இருவரும் உறவினர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் திடீரென நடனமாடத் தொடங்கினர். கல்யாண கோலத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு க்யூட்டாக வெட்கப்பட்டுக் கொண்டே தம்பதிகள் இருவரும் நடனமாடினர். அப்போது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கத்தி கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இந்த வீடியோ மணமகன் விஜயின் நண்பர்களால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது.  இந்நிலையில் விஜய் மற்றும் அம்சவள்ளியின் திருமணக்கோல குத்தாட்டம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கூலிங் கிளாஸ் உடன் தம்பதிகள் குத்தாட்டம் போட்ட வீடியோவை நண்பர்கள் சமூக வலைதலங்களில் பரப்பி வருவதுடன் தம்பதிகளுக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:Ilayaraja: 80வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா.. பரிசுடன் நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details