Night Party: பள்ளி முன்பு பார்ட்டி பேனர்.. கல்வியாளர்கள் எதிர்ப்பு.. - பள்ளி நுழைவு வாயிலில் பேனர்
தஞ்சாவூர்: புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியின் நுழைவு வாயிலில், புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் இணைந்து தோளோடு தோள் கைப்போட்டபடி படம் அச்சிடப்பட்டு பார்ட்டி நைட் என்ற விளம்பர பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தால் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகள் மனதில் கலாச்சார சீரழிவை உருவாக்கும் வகையில் உள்ளது எனவே உடனடியாக இந்த பேனரை பள்ளிக்கூடம் நுழைவு வாயிலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST