புத்தாண்டு கொண்டாட்டம்; புதுக்கோட்டையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை - புதுக்கோட்டை தேவாலாயம்
புதுக்கோட்டை: ஆங்கில புத்தாண்டையொட்டி, மார்த்தாண்டபுரத்தில் திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இன்று (ஜன.1) சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மிக விமரிசையாக நடந்த இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில், மக்கள் நோய் நொடி இன்றியும் வாழ்வில் செழிப்போடும், மகிழ்வோடும் வாழ வேண்டி பங்கு தந்தையர் உள்ளிட்டோர் கூட்டாக பாடல்கள் பாடினர். அத்தோடு இருள் நீங்கி இந்த ஆண்டு ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் அனைவரும் தொடர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST